பொறுப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்கணும் !

கழுகேர்கடை ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-28 07:08 GMT

கழுகேர்கடை ஊராட்சி மன்ற பொறுப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கழுகேர்கடை ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கோட்டைச்சாமி என்பவர் உடல்நல குறைவால் சமீபத்தில் உயிரிழந்தார். ஊராட்சி மன்ற தலைவர் இறந்ததால் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்த ரேவதி என்பவர் ஊராட்சி மன்ற பொறுப்புத் தலைவராக பதவியில் இருந்து வருகிறார். ரேவதி ஊராட்சி மன்ற பொறுப்புத் தலைவராக வந்ததிலிருந்து முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே முறைகேடு செய்த 48 ஆயிரம் ரூபாய் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் கழுகேர்கடையில் ரேஷன் கடை கட்டுவதற்கு நிதி வந்துள்ள நிலையில் எந்த வேலையும் செய்யாமலேயே 100 நாள் வேலை செய்யும் ஆட்களின் வேலை அட்டையை பயன்படுத்தி சுமார் 95 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்ததாக கூறப்படும் நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்
Tags:    

Similar News