மழையூர்புதூர் செல்லும் சாலை அமைக்க நடவடிக்கை: எம்.எல்.ஏ உறுதி

மழையூர் புதூர் செல்லும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதி அளித்துள்ளார்.

Update: 2023-12-19 10:12 GMT

சட்டமன்ற உறுப்பினர் உறுதி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மழையூர் புதூர் செல்லும் ஒரு கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க நடவ டிக்கை எடுப்பதாக புதிய ரேசன் கடை திறப்பு விழா வில் எம்எல்ஏ எஸ்.அம் பேத்குமார் தெரிவித்தார். வந்தவாசி அடுத்த மழையூர் தேசிய ஊராக கிராமத்தில் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் மூலமாக ரூ. 12.61 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங் கன்வாடி மையம் கட்டி டம். அதேபோல் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம்மாக ரூ. 7.49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேசன் கடையை திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு தெள்ளார் ஒன்றிய குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்கள் ஏ.சுந்தரேசன், டி. ராதா, ப.இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாஞ்சாலை ராமு, சுதாவிஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் எம்.பசுபதி வரவேற்றார்.

இதில் புதிய கட்டிடங்களை எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் கொண்டு கட்டிடங்களை கலந்து புதிய திறந்துவைத்து பேசியதாவது: மழையூர் ஊராட்சியில் ஏற்கனவே கால்நடை மருந்தகத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் தற்பொழுது ரேசன் கடை அங்கன்வாடி மையம் என பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வளர்ச்சி மிகுந்த ஊராட்சியாக மாறிவருகின்றது.

இப்பகுதி பொதுமக்கள் மழையூர் புதூர் ஏரி மீது செல்லும் மண்சாலையைசிமெண்ட் சாலையாகமாற்றவேண்டி கோரிக்கை விடுத்துள்ள னர். இது குறித்து பொதுப் பணி துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக சிமெண்ட்சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதநிதிகள் பி. ரகுநாதன், எஸ்.கெம்பு ராஜ், ஆர்பாரதிராஜா, ஒன் றிய துணை செயலாளர் கள் .ேசக்கர வர்த்தி,விசாலாட்சி வெங்கேடசன் உள்ளிட்டபலரும் இருந்தனர்.

ஊராட்சி முடிவில் செயலளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News