தூய்மை பணியாளர்களை வெப்ப அலையிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை

திருவேற்காடு நகராட்சியில் தூய்மை பணியாளர்களை வெப்ப அலையிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-07 13:56 GMT

திருவேற்காடு நகராட்சியில் தூய்மை பணியாளர்களை வெப்ப அலையிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


திருவேற்காடு நகராட்சியில் தூய்மை பணியாளர்களை வெப்ப அலையிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவேற்காடு நகராட்சி ஆணையர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி சுகாதார பிரிவில் தூய்மை பணியாளர்களின் நலன் கருதி ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் போதிய அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு தேவைப்படும் பொழுது ஓஆர்எஸ் பாக்கெட்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான சுத்தமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனத்துடன் கலந்து பேசி, தூய்மை பணியாளர்களுக்கு குடிநீர், மோர், பழச்சாறு, குளிர்பானங்கள், பழங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்களின் பணி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பணியாளர்களுக்கு காலை 5.45 மணி அளவில் வருகைப் பதிவு செய்யப்பட்டு 6 மணியிலிருந்து பிற்பகல் 12 மணி வரை தொடர்ந்து பணி செய்ய ஏதுவாக பணி நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பணியாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரிவதை உறுதி செய்ய அறிவுறுத்தியுள்ளது. வெப்ப அலையிலிருந்து தூய்மை பணியாளர்களை பாதுகாக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை நகராட்சி சுகாதார அலுவலர் ஆல்பர்ட் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், தனியார் வெளிக்கொணர்வு நிறுவனம் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Tags:    

Similar News