சமூக விரோதி செயல்களுக்கு துணை போனால் போலீஸ் மீது நடவடிக்கை!
வேலூர் மாவட்டத்தில் சமூக விரோதி செயல்களுக்கு காவல் துறையினர் துணை போவது தெரிந்தால் கடும் நடவடிக்கை பாயும் என எஸ்பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-06-19 10:57 GMT
வேலூர் மாவட்டத்தில் சமூக விரோத செயல்களை முற்றிலும் ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.குறிப்பாக கஞ்சா, குட்கா, ஹான்ஸ், சாராயம் உள்ளிட்ட போதை பொருட்கள்,மணல் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்,சமூக விரோத செயல்களுக்கு துணை போகும் காவல்துறையினர் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி மணிவண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.