நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழா: திரை பிரபலங்கள் பங்கேற்பு
1940 முதல் திரையுலகில் கொடிகட்டி பறந்த மறைந்த முதுபெரும் நடிகர் டி.ஆர்.மகாலிங்கத்தின் நூற்றாண்டு விழாவில் திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் வாழ்ந்து மறைந்தவர் சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். இவர் ஜூன் 16ஆம் தேதி 1924-ல் பிறந்து இன்று நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.
இவர் இசை இயல் இசை நாடகம் துறையில் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர். பல்வேறு படங்களில் பாடல், தயாரிப்பாளராகவும், நடிகராகவும், இசையமைப்பாளராகவும் விளங்கியவர். 1940 - 1950களில் பிரபலமாகயிருந்தவர் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்,
திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் T.R.மகாலிங்கம். உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்ற இவர் நடித்த காதல் மற்றும் பக்திப்பாடல்கள் இவருக்குப் பெயர் வாங்கித் தந்தன. 39 படங்களில் நடத்த இவர் தனது 5 வயது முதல் நாடக மேடை ஏறி தனது பாடல் மூலம் பல்வேறு புகழடைந்தார்.
இவரது மேடை நாடக பாடலின் மெய்சிலிர்த்த ஏவி மெய்யப்பச் செட்டியார் டி.ஆர்.மகாலிங்கத்திற்கு 13-வது வயதில் பட வாய்ப்பு வழங்கினார். அதன் பிறகு திரைத்துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்தார்.
முன்னாள் முதல்வர்கள் காமராஜர், கலைஞர், எம்ஜிஆர் ஆகியோருடன் நன்கு இணக்கமாக இருந்தவர். 1962-ல் சோழவந்தானில் வீடு கட்டி வாழ்ந்து வந்தவர் தற்போது அவருடைய நூறாவது பிறந்த நாள் இன்று நடைபெற்றது. அவரது பிறந்தநாளை நூற்றாண்டு விழாவாக கொண்டாடும் விதமாக அவர் வாழ்ந்த வீட்டில் அவரது திருவுருவ சிலை திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பிரபல திரைப்பட பாடகி பி.சுசீலா, திரைப்பட நடிகர்கள் ராஜேஷ், நாசர், சீர்காழி சிவசிதம்பரம், சந்தன பாரதி மற்றும் திரைப்பட நடிகைகள் சச்சு உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். நடிகர் சங்க தலைவரும் திரைப்பட நடிகருமான நாசர் அவரது திருவுருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் டி.ஆர்.மகாலிங்கம் அவர்கள் பாடிய செந்தமிழ் தேன் மொழியாள் பாடல் இன்றைய தலைமுறையினருக்கும் பிடித்த பாடலாக விளங்கி வருகிறது.
இன்றைய விழாவில் பங்கேற்றது என் வாழ்நாள் சாதனை என பெருமிதத்துடன் தெரிவித்தார். அதே போன்று பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா தான் பாடிய ஒரு சில பாடல்களின் ஒரு சில வரிகளை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.