தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்: ஜூலை 1ஆம் தேதி தொடக்கம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 2 மாத காலத்துக்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
புதுகை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக வயிற்றுப்போக்கு உள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆயிரம் பிறப்புகளுக்கு 10 ஆக குறைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் இலக்காகும் வயிற்றுப்போக்கினால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை 2 மாத காலத்துக்கு தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.
பொது சுகாதார துறையுடன் இணைந்து தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் நல்வாழ்வு கிராம பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் பள்ளி கல்வி ஆகிய துறைகள் இணைந்து இந்த திட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சத்து 3765 குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் மூலம் பயன் பெற உள்ளன. ஐந்து வயது க்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஓ ஆர் எஸ் பொட்டலம் மற்றும் ஜிங் மாத்திரைகள் கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் திட்டம் நடக்கும் இரண்டு மாதத்தில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ளது.