மின் உற்பத்தி செய்ய அதானி நிறுவனம் திட்டம்

வேலூர் மாவட்டத்தில் மின் உற்பத்தி செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Update: 2024-05-20 15:13 GMT

வேலூர் மாவட்டத்தில் மின் உற்பத்தி செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் நீர்த்தேக்கங்கள் மூலம் அதானி நிறுவனம் மின் உற்பத்தி செய்யவுள்ளது. மின் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அனுமதியை "அதானி கிரீன் எனெர்ஜி" நிறுவனம் கோரியது. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம் அல்லேரி என்ற இடத்தில் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரூ.24,500 கோடி முதலீட்டில் 3 நீர்த்தேக்கங்கள் மூலம் மின் உற்பத்தி செய்ய கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News