வானூர் அருகே அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடப் பணி
வானூர் அருகே அரசு பள்ளியில் கூடுதல் கட்டிடப் பணி. ஆட்சியர் ஆய்வு.;
Update: 2024-06-01 06:31 GMT
ஆய்வு
விழுப்புரம் மாவட்டம், வானூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புளிச்சப்பள்ளம் அரசு டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டுமானப்பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் வளர்மதி, தாட்கோ செயற்பொறியாளர் அன்பு சாந்தி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமார் உதவி கல்வி அலுவலர் கலிவரதன் உள்ளிட்டோர் பலர் உடன் இருந்தனர்.