ஆரியூர் ஊராட்சியில் மத்திய அரசு திட்ட வீடுகள் கூடுதல் திறப்பு
ஆரியூர் ஊராட்சியில் மத்திய அரசு திட்ட வீடுகள் கூடுதல் கலெக்டர் திறந்து வைத்தார்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-17 11:10 GMT
விழுப்புரம் மாவட்டம் காணை ஒன்றியம் ஆரியூர் ஊராட்சியில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் தலா ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு ஒப் படைத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு காணை ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ் ஜெய்நாராயணன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி வீடுகளை திறந்து வைத்து, அதற்கான சாவிகளை பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.
இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் நரசிம்மன், ஒன்றிய பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், அப்துல்ரஹீம், ஆரியூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜ், ஊராட்சி செயலாளர் குணசேகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.