ஜமீன் அகரம் நடுநிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
ஜமீன் அகரம் நடுநிலைப் பள்ளியில் வரும் 2024-25 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-07 11:57 GMT
மாணவர் சேர்க்கையில் கலந்து கொண்டவர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வரும் 2024-25 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார். ஆசிரியைகள் மணிமேகலை.
கௌரி,சுடர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அருண்குமார் வரவேற்றார். இதில் அரசுபள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத் திட்டங்கள் மற்றும் தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பின்னர் நடந்த மாணவர் சேர்க்கையில் கௌஷிக், லோகேஸ்வரன்,
விஷ்ணு, ஸ்ரீஹரிணி ஆகிய 4 பேர் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர். முடிவில் ஆசிரியர் மார்கிரேட் மேரி நன்றி கூறினார்.