விளையாட்டு விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை - ஆட்சியர் தகவல்
பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதிகள், முதன்மை நிலை விளையாட்டு மையம் மற்றும் சிறப்புநிலை விளையாட்டு விடுதிகளில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை நடைபெறவுள்ளதால் தகுதியுடைய மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் , பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. 2024ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவ, மாணவியர்கள் 7, 8, 9, மற்றும்11 ஆம் வகுப்புகளில் சேருவதற்கான மாவட்ட அளவிலான தேர்வுப்போட்டிகள் வரும் மே 10-ம் தேதி அன்று மாணவர்களுக்கும், மே 1 1ஆம் தேதி அன்று மாணவியர்களுக்கும் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர் விளையாட்டரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.
விளையாட்டு விடுதியில் மாணவ, மாணவியரகள் சேருவதற்கு மே 8 ஆம் தேதி மாலை 5.00 மணி வரை ஆன்லைன் மூலம் www.sdat.tn.gon என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபாடி, கையுந்துபந்து, கிரிக்கெட் மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளுக்கும், பள்ளி மாணவியர்களுக்கான தேர்வு போட்டிகள் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, கபாடி, மற்றும் கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளுக்கும் நடத்தப்படும், மாவட்ட அளவில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவிலான தேர்வுப்போட்டிகளில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். .