தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்
தூத்துக்குடி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி, சிவன் கோவிலில் வழிபாடு செய்த பின் அவரது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.;
தேர்தல் பிரச்சாரம்
நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்நிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பண்டாரவிளை வைத்தியர் ஆர்.சிவசாமி வேலுமணி நேற்று அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், அதிமுக மாநில வர்த்தக அணிச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை ஆகியோர் உடன் தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியால் உடனுரை சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் வழிபாடு செய்து பின்னர் அவரது தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் அறுமுகநயினார், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநரணி இரா.சுதாகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்ணேஷ், மாவட்ட சிறுபாண்மையினர் நலப் பிரிவு கே.ஜெ.பிரபாகர், மாவட்ட வழக்கறிஞர் அணி யு.எஸ்.சேகர், பகுதி கழக செயலாளர் சேவியர், முருகன், ஜெய்கனேஷ், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சரவணபெருமாள், முன்னாள் மெயர் அந்தோணிகிரேஸி, உள்ளிட்டோர் உடன்இருந்தனர்.