இந்தியில் பேசி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்
விராலிமலையில் இறுதிக்கட்ட பிரசரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் தங்கவேல் நாடாளமன்றத்தில் காவிரி நீருக்காக எப்படி பேசுவேன் என இந்தியில் பேசி பிரசாரம் செய்தார்.
தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இறுதி கட்ட பிரச்சாரம் நடைபெற்றது சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டர் கலந்து கொண்டனர்அப்போது பேசிய அதிமுக வேட்பாளர் தங்கவேலு காவிரி நீரை நாடாளுமன்றத்தில் நான் ஹிந்தியில் எவ்வாறு கேட்பேன் என்று கூறி ஹிந்தியில் பேசி மக்களிடையே வாக்குகளை சேகரித்தார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஐந்து வருட காலங்களாக வராத ஜோதி மணிக்கு கை சின்னத்தில் வாக்களிக்காமல் கையைக் காட்டி பைபா என்று கூறுங்கள் என்று குறி வாக்குகளை சேகரித்தார் ஜோதிமணி உங்களுடைய காதுகுத்துக்கும் கல்யாணத்துக்கோ விராலிமலை முருகன் கோவிலுக்கு வந்தார்களா ஆனால் உங்கள் விஜயபாஸ்கர் உங்களுடைய பிள்ளை காது குத்தை எனது மடியில் உட்கார வைத்து காது குத்துவேன் உங்களின் கல்யாணம் வீட்டுக்கு நான் இருப்பேன் விராலிமலை முருகன் கோவில் திருவிழா என்றால் நான் அங்கு இருப்பேன் ஆனால் இதுவரை ஜோதிமணி வந்தாரா என்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் கண்டிப்பாக பொதுமக்கள் நீங்கள் அனைவரும் இரட்டை இலை வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்றார்.