அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய குடும்பத்தினர்
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவிற்கு ஆதரவாக அவரது குடும்பத்தினர் அதிமுக நிர்வாகிகளோடு சேர்ந்து வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.;
வாக்கு சேகரிப்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் கருப்பையா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் தினந்தோறும் வாக்குகளை சேகரித்து வருகிறார் பொதுமக்களை அவர் சந்தித்து அவர் வெற்றி பெற்றால் செய்யக்கூடிய சாதனைகள் வாக்குறுதிகள் ஆகியவற்றை கூறி அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற சாதனைகளையும் எடுத்து கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்த நிலையில் வேட்பாளர் கருப்பையாவுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரிப்பதற்காக அவரது மனைவி விமலா மற்றும் கருப்பையாவின் அண்ணி சத்யா ஆகியோர் தனித்தனியாக வெவ்வேறு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகளோடு புதுக்கோட்டை பெரியார் நகர் பகுதியில் வீடு வீடாக சென்று பொது மக்களை சந்தித்து கருப்பையாவுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர் அப்போது அவர்கள் பொதுமக்களிடம் பேசுகையில் மக்களின் குறைகளை கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க கருப்பையாவிற்கு வாக்களிக்க வேண்டும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எளிதில் அணுகக்கூடிய தீர்வு காணக்கூடியவராக கருப்பையா இருப்பார் என்று ஊரில் வாக்குகளை சேகரித்தனர்.