அதிமுக பொது செயலாளருக்கு அக்கட்சியினர் சேலம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு.
Salem airport;
By : King 24X7 News (B)
Update: 2023-11-17 11:28 GMT
சேலம் மாவட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டு சென்றார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்து வழியனுப்பி வைத்தனர்.இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், முன்னாள் சபாநாயகர் தனபால், சட்டமன்ற உறுப்பினர் ராஜமுத்து, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.