விடியா திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

சாத்தூரில் விடியா திமுக அரசை கண்டித்து கொளுத்தும் வெயிலில் அதிமுகாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

Update: 2024-03-05 03:02 GMT

ஆர்ப்பாட்டம்

விடியா திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கொளுத்தும் வெயிலில் கண்டன கோஷமிட்ட தொண்டர்கள். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் திமுகவின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த ஆட்சிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.திமுக ஆட்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே சகஜமாக புழங்கி வரும் கஞ்சா பழக்கம் அதனைக் கண்டு கொள்ளாத ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை ஆகியவற்றை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சியில் எடப்பாடி யார் சீரோடும் சிறப்போடும் நடத்திய ஆட்சியில் மக்கள் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் இருந்ததாகவும் தற்போது வேலை வாய்ப்பின்றி கடன் சுமையில் தவிக்கின்றனர். அது மட்டுமில்லாது தற்போதைய திமுக ஆட்சியில் தொடர் திருட்டு கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதாகவும் கஞ்சா பழக்கங்கள் அதிகரித்து வருவதாகவும் இதற்கு திமுகவின் நிர்வாக சீர்கேடு காரணம் என்றும் விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கண்டன உரையில் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர, ஒன்றிய பகுதியை சேர்ந்த ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News