இலவச நோட்டுகள் வழங்கிய அ.தி.மு.க.வினர் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு !

குமாரபாளையம் அ.தி.மு.க. சார்பில் மாணவ, மாணவியருக்கு இலவசமாக நோட்டுகள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் பங்கேற்றார்.;

Update: 2024-07-09 12:20 GMT

இலவச நோட்டு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்டலபுரி அ.தி.மு.க. சார்பில் மாணவ, மாணவியருக்கு இலவசமாக நோட்டுகள் வழங்கும் விழா கவுன்சிலர் நாகநந்தினி, வார்டு செயலர் உதயகுமார் தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, 360 மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுகள் மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கி வாழ்த்தி பேசினார்.

இவர் பேசியதாவது: ஆண்டுதோறும் இப்பகுதி மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டுக்களை உதயகுமார், நாகநந்தினி வழங்கி வருவது பாராட்டுக்குரியது. நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்கள் பணியை செய்து கொண்டுதான் இருப்போம். கான்கிரீட் சாலை அமைக்க கேட்டார்கள். எனது எம்.எல்.ஏ. நிதியிலிருந்து 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்தேன். அந்த சாலை பணி நிறைவு பெற்றது.

Advertisement

தற்போது வடிகால் வேண்டும் என்று கேட்டுள்ளனர். விரைவில் நிதி தர ஆவண செய்கிறேன். என்னை குமாரபாளையம் பகுதி மக்கள் நான்கு முறை தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். அதற்காக உங்கள் வீட்டு பிள்ளையாக சேவை செய்ய தயாராக உள்ளேன். உங்கள் வீட்டு சுக, துக்க நிகழ்சிகளில் நானுன் பங்கேற்று வருகிறேன்.

நேற்று பெய்த மழையில் நனைந்த முளைத்த காளான்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகள் இதே போல் மக்கள் பணி செய்வோம். அதனை தொடர்ந்து உங்கள் ஆதரவால் ஆட்சி அமைத்து மக்கள் பணி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News