அ.தி.மு.க. துவக்க விழா பொதுக்கூட்டம்
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.;
By : King 24x7 Website
Update: 2023-10-31 10:27 GMT
அதிமுக பொதுக்கூட்டம்
குமாரபாளையத்தில் அ.தி.மு.க. 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது. இதில் பேசிய குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் நிர்வாகிகள், தி.மு.க. அரசின் அராஜக போக்கை கண்டித்து பேசினார்கள். முன்னாள் நகராட்சி தலைவர் தனசேகரன், கவுன்சிலர்கள் பழனிசாமி, புருஷோத்தமன், நகர துணை செயலர் திருநாவுக்கரசு, பள்ளிபாளையம் நிர்வாகிகள் செந்தில், வெள்ளிங்கிரி, சுப்பிரமணி, உள்பட பலர் பங்கேற்றனர். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலர் செந்தில் பேசுகையில் தி.மு.க.வினர் எதுவும் செய்வது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. ஏனெனில், முன்னாள் அமைச்சர் தங்கமணி குமாரபாளையம் நகருக்கு தேவையான எல்லாம் செய்து தந்து விட்டார். அதனால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அதனால் விதி மீறி பல சட்ட விரோத செயல்களை செய்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் தங்கமணியை தோற்கடிக்க பல வியூகங்கள் செய்து வருவதாக அறிந்தேன். இனி ஒருவன் பிறந்து தான் வரவேண்டும். தங்கமணியை தோற்கடிக்க.என்று பேசினார்