ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எதிர்ப்பு
பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை மாற்று இடம் வழங்காமல் அகற்றுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Update: 2024-03-08 09:02 GMT
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் அடிவாரத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை மாற்று இடம் வழங்காமல் அகற்றுவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது X தளத்தில் கூறியிருப்பதாவது "பல ஆண்டுகளாக அக்கடைகளை நம்பிதான் தங்கள் வாழ்வாதாரமே உள்ளதாகவும், அவர்களுக்கு கால அவகாசம் வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.