கன்னியாகுமரியில் அதிமுக வெற்றி உறுதி: வேட்பாளர் பசிலியான்

கன்னியாகுமரி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.;

Update: 2024-04-06 09:03 GMT

கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் 

கன்னியாகுமாரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர் பசிலியான்  நசரேத் போட்டியிடுகிறார். அவர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இன்று பேயன் குழி அம்மன் கோவிலில் சாமி தரிசனத்துக்கு பின், குருந்தங்கோடு, அம்மாண்டி விளை, வெள்ளிச்சந்தை போன்ற பகுதிகளில் திறந்த ஜீப்பில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.  அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டின் போது கூறியதாவது,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளில் இரண்டு வேட்பாளர்களும் இதுவரை மக்களுக்காக எந்த நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை. எனவே அதிமுக வெற்றி பெறுவது உறுதி. மக்கள் சமூக நல்லிணக்கத்தை எதிர்பார்க்கிறார்கள்.

அதனை ஜெயலலிதா வழியில் கட்சியை வழிநடத்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் மட்டும் தான் ஏற்படுத்த முடியும் என்று கூறினார். இந்த பிரச்சார நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால்,  அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News