மேலப்பாளையத்தில் அதிமுக 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-23 05:39 GMT

கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்.பி அன்வர் ராஜா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் கணேஷ ராஜா தலைமையில் அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான அன்வர் ராஜா முன்னாள் சிறுபான்மையினர் நல ஆணைய முன்னாள் தலைவர் ஜான் மகேந்திரன் உள்ளிட்டார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். கூட்டத்தில் பேசிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான அன்வர் ராஜா அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மேலப்பாளையம் பகுதியில் நடந்து வருகிறது. அதிமுக என்பது உயிர் உள்ள கட்சியாக என்றும் திகழ்ந்து வருகிறது திமுக காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளில் சாமானியன் போய் சேர முடியாத நிலை உள்ள சூழலில் அதிமுகவில் மட்டும்தான் சாமானியன் கூட கட்சியிலும் ஆட்சியிலும் மிகப்பெரிய பொறுப்புக்கு வர முடியும் வாய்ப்பு கிடைத்தால் தேர்தல் களத்தில் திமுகவை பந்தாடுவதற்க்கு அதிமுக தயாராக உள்ளது அதிமுகவின் சின்னமும் கட்சியின் பெயரும் எங்கு இருக்கிறதோ அங்கு தான் அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் இருப்பார்கள் அதிமுக ஆட்டம் காணும் கட்சி அல்ல யாரிடமும் அடிபணியும் கட்சியும் அல்ல.. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்ற ஒரே திராவிட இயக்க தலைவர் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மட்டும் தான் தமிழகத்தில் பாரத ரத்னா விருது பெற்ற எட்டு பேரில் எம்ஜிஆர் ஒருவர் அதிமுக தொண்டர்கள் யாரும் எம்ஜிஆர் க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு மனு அளிக்காத நிலையிலும் எம்ஜிஆர் உயிரிழந்து மூன்று நாட்களில் ராஜீவ் காந்தி பாரத ரத்னா விருதை ஜானகி அம்மையாரிடம் வழங்கினார் அதிமுக பாஜகவை விட்டு வெளியேற வேண்டும் என அரசியல் நிலைப்பாட்டை எடுத்துள்ளது அதிமுக - பாஜகவின் கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக அதிமுகவின் பொது செயலாளர் அறிவிப்பு செய்துவிட்டார் அதிமுக பாஜகவுடன் அரசை காக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் கூட்டணியில் இருந்தது தற்போது ஆபத்தை கடந்து விட்டோம் என்ற நிலையில் நாங்கள் உங்களுடன் கூட்டணியில் இல்லை என பாஜகவிடம் எடப்பாடி பழனிசாமி சொல்லி விட்டார். பாஜகவை கைவிட்ட நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி மிரட்டினால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுகவிற்கு ஆதரவாக இருப்பார்கள் ஜனவரியில் தேர்தல் வந்துவிடும் இப்போது இருக்கும் இரண்டு மாதங்களில் எந்த அமலாக்கத்துறை சோதனையும் பாஜகவில் நடத்த முடியாது திமுகவுடன் இருந்த பாஜக வேறு தற்போது இருக்கும் பாஜக வேறு அப்போது இருந்தது வாஜ்பாய் அத்வானி பாஜக., இப்போது இருப்பது மோடி அமித்ஷா பாஜக. பாஜக செய்யும் அனைத்து செயலையும் கூட்டணி தர்மத்திற்காக அதிமுக சகித்துக் கொண்டது பாஜகவிற்கு எதிராக எந்த கருத்தையும் கூட்டணியில் இருக்கும் போது அதிமுக சொன்னதில்லை. கூட்டணியில் இருக்கும் போது பாஜகவை நான் விமர்சித்து இருந்தால் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும்போதே என்னை கட்சியிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கி உத்தரவிட்டிருப்பார் இப்போது நாங்கள் கூட்டணியில் இல்லை எடப்பாடியின் அனுமதியோடுதான் தற்போது பாஜகவின் செயல்பாடுகள் குறித்து பேசி வருகிறே.ன் இஸ்லாமியர்களின் பாதுகாவலர் என்றால் அது அதிமுக மட்டும் தான் அதிமுக பாஜக கூட்டணியில் இல்லை என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த உடனேயே திமுக தலைவர் பீதி அடைந்து விட்டார்.அன்றைய தினம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மாறிய முகம் இன்று வரை மாறவே இல்லை கூட்டணியில் இல்லை என்ற அறிவிப்பை அதிமுக வெளியிட்ட உடனேயே ஐ யூ எம் எல் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நடத்த தொடங்கி விட்டனர். இஸ்லாமியர்களின் வாக்குகளை கேட்டு சென்றால் நீங்கள் பாஜகவுடன் கூட்டணி இருந்தீர்கள் என இஸ்லாமிய மக்கள் கேட்கக்கூடாது என்பதற்காக வாக்குமூல அறிக்கை சொல்லும் இடம் தான் இன்றைய பொதுக்கூட்டம் இஸ்லாமியர்களின் அதிக வாக்கு வங்கி வைத்துள்ள கட்சியான எஸ் டி பி ஐ கட்சி விரைவில் அதிமுக கூட்டணியில் இணையும் உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என தொடர்ந்து கேட்டு வருகிறார்கள் இதுவரை எந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதமர் வேட்பாளரை சொன்னது கிடையாது பிரதமர் வேட்பாளர் யார் என சொல்லி எந்த தேர்தலையும் யாரும் சந்தித்ததும் கிடையாது பிரதமர் வேட்பாளர் யார் என கேட்டு நீங்கள் கவலைப்பட வேண்டாம் அதிமுக இஸ்லாமியர் பக்கம் தான் உள்ளது இஸ்லாமிய சமுதாயம் எடப்பாடி பழனிச்சாமிக்கு துணை நின்றது என்ற சரித்திரத்தை நாம் எழுத வேண்டும் என தெரிவித்தார்.


Tags:    

Similar News