தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது.;

Update: 2024-06-25 06:21 GMT

கள்ளக்குறிச்சியில் தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியது.


கள்ளக்குறிச்சியில் தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் இறந்தனர். கள்ளச்சாராயத்தைக் ஒழிக்கத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அண்ணா நகர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., வரவேற்றார். அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டன உரையாற்றினார்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர் மோகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவர் சத்யன், முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அழகுவேல்பாபு, பிரபு, ஜெ.,பேரவை செயலாளர் ஞானவேல். தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண், ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி, கதிர் தண்டபாணி, அருணகிரி, துரைராஜ், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், பழனி, சேகர், சந்தோஷ், மணிராஜ், செண்பகவேல், சந்திரன், ஏகாம்பரம், ராமலிங்கம், எஸ்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, மேலப்பட்டு ராஜேந்திரன் பங்கேற்றனர்.

Tags:    

Similar News