தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
தூத்துக்குடியில் மது குடிப்பதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;
Update: 2023-12-27 09:00 GMT
தாய் கண்டித்தால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
தூத்துக்குடியில் மது குடிப்பதை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, தூத்துக்குடி கீதா ஜீவன் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் உதயமூர்த்தி (23). இவர் மீது காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. இவர் தினசரி மது அருந்துவாராம். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.