குழந்தை திருமணத்தை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

கரூரில் குழந்தை திருமணத்தை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2024-01-10 12:40 GMT

குழந்தை திருமணத்தை தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம், மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், பூசாரிகள், அர்ச்சகர்கள், பாதிரியர்கள், உலமாக்கல்கள், மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு குழந்தைகள் திருமணம் தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் தங்கவேல் பேசும்போது, குழந்தை திருமணத்தை தடுக்க சட்டபூர்வமாக கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயமாக இருந்தாலும், சமூக ரீதியாகவும்,ஒரு குழந்தையால் மணப்பெண்ணாக இருக்கக்கூடிய பக்குவத்தை உடல் அளவிலும், மனதளவிலும் இருக்க வேண்டும்.

தொடர்ச்சியாக குழந்தை திருமணங்கள் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற வருவது வேதனைக்குரிய விஷயம். பல்வேறு திருமணங்களை தடுத்து இருக்கிறோம். பெரும்பான்மையான இடங்களில் எவ்வளவு விழிப்புணர்வு அளித்தும், குழந்தை திருமணங்கள், மண்டபம் மற்றும் கோவில்கள் வழிபாட்டு தளங்களில் நடைபெற்று வருவது என்பது வேதனைக்குரிய விஷயம். அனைத்து சமயங்களை சேர்ந்த திருமண வைபோகத்தை நடத்தி வைப்பவர்கள் பொறுப்புடன் செயல்பட்டு சட்டத்துக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இது போன்ற விஷயங்கள் தங்களுக்கு தகவல் தெரிந்தால், அதை தடுக்க வேண்டும். மணப்பெண்ணிற்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். இதை எடுத்துரைக்க வேண்டும்.உங்களிடம் இந்த நல்ல ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். மேலும், குழந்தை திருமண சட்டப்படி குழந்தை திருமணத்தில் ஈடுபடக்கூடிய மணமகன் வீட்டார் மற்றும் இதனை நடத்தக்கூடிய பெற்றோர் மட்டும் இன்றி, அந்த குழந்தை திருமணத்தை நடத்தி வைப்பவர்களும் தண்டனைக்குரியவர்கள் என்ற விஷயத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

திருமண மண்டபம் உரிமையாளர்கள், திருமணம் நடத்தி வைப்பவர்கள், திருமணத்திற்காக பத்திரிக்கை அச்சடித்தவர், எந்த சமயமாக இருந்தாலும், எந்த மதமாக இருந்தாலும் அவர்களை தண்டிக்க கூடிய அளவிற்கு சட்டம் கடுமையாக வரப் பெற்றுள்ளது. எனவே, அனைவரும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பை நல்குமாறு கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். குழந்தை திருமணம் இல்லாத கரூர் மாவட்டமாக திகழ முழு ஒத்துழைப்பு நீங்கள் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

Tags:    

Similar News