பள்ளியை தரம் உயர்த்த ஆலோசனை கூட்டம்
அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளியை தரம் உயர்த்துவது குறைத்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். ஊர் நிர்வாகிகள் குருசாமி, முப்புடாதி வேலு, பொன்னுச் சாமி, சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த சில மாதங்களுக்கு அய்யாபுரத்தில் நடைபெற்ற மனுநீதி நாளில் ஊர் நிர்வாகி குருசாமி நாடார் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அய்யாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை மனுவாக கொடுத்து உள்ளார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவரின் முயற்சியால் தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இருந்து முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கு இடம் வாங்குவதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், பொருளாளர் சுப்பிரமணியன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினர்.