சி.ஏ.ஏ வை கண்டித்து வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் சி ஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
Update: 2024-03-16 10:41 GMT
ஆர்ப்பாட்டம்
விழுப்புரத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் சி ஏ சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் கோர்ட் வளாகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார் நிர்வாகிகள் பிரகாஷ், சரவணன், சசிகுமார், சம்சுதீன், குருநாதன் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாநில துணைத்தலைவர்கள் முன்னாள் எம்எல்ஏ ராமமூர்த்தி, சங்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் அதனை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.