கோட்டூர் மலைக்கு 75 ஆண்டுகளுக்கு பின் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைப்பு
தர்மபுரி மாவட்டம், கோட்டூர் மலை பகுதிக்கு 75 ஆண்டுகளுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் டிராக்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
Update: 2024-04-18 16:11 GMT
தர்மபுரி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரம் சட்டமன்ற பிரிவில் வாக்குச்சாவடிகள் 1, 2 ஏரிமலை மற்றும் கோட்டூர் மலை ஆகியவற்றிற்கு கடந்த தேர்தல் வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கழுதை மூலமே அனுப்பி வைக்கப்பட்டது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு,தற்பொழுது தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தியின் தீவிர முயற்சியினால் இந்த தேர்தலில் டிராக்டர் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கான பொருட்கள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.