வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு கூட்டம்

துடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயற்கை உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பேரணி நடைப்பெற்றது.

Update: 2024-04-08 13:10 GMT

துடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயற்கை உணவின் முக்கியத்துவம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு கூட்டம் மற்றும் பேரணி நடைப்பெற்றது.


தனலெட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரி மாணவிகள் வேளாண் பணி அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு மற்றும் பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக துடையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இயற்கை உணவின் முக்கியத்துவத்தை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து திருவாசி ஊராட்சி மன்ற தலைவர் பானு முருகேசன்,வேளாண்மை அலுவலர் சௌமியா, வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன்‌‌, தலைமை ஆசிரியை ராஜராஜேஸ்வரி மற்றும் ‌உதவி தலைமை ஆசிரியை காயத்ரி ஆகியோர் முன்னிலையில் பேரணி‌ நடைப்பெற்றது. இதில் கல்லூரி‌ மாணவிகள், வேதிப்பொருள் கலப்படமற்ற பண்டைய கால‌ உணவு முறைகளை பின்பற்றுவதற்கான வழிமுறைகளை பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வில் வேளாண் கல்லூரி மாணவிகள் திவ்யா ரேச்சல்,ஹெர்லின், இஷ்ரத் ரிகானா,ஜனனி, ஜெயந்திகா,ஜெனோ வெர்ஜின்,ஜனனி மற்றும் ஜோதி முகுந்தா ஆகியோர் கொண்ட குழு நோயினை ஏற்படுத்தும் இரசாயன பொருட்கள் கலந்த இந்த கால உணவுகளை தவிர்த்து ஆரோக்கியம்‌ நிறைந்த‌ இயற்கை உணவுகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊக்குவித்தனர்.

Tags:    

Similar News