விவசாயியிடம் பயிற்சி பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகள்

பெரம்பலூர் அருகே எசனை கிராமத்தில் இயற்கை வேளாண்மையில் அசத்தி வரும் விவசாயிடம் நாளந்தா வேளாண்மை கல்லூரி மாணவிகள் பயிற்சி பெற்றனர்.

Update: 2024-05-16 04:35 GMT

பயிற்சியில் கலந்து கொண்ட மாணவிகள் 

திருச்சி மாவட்டம்,எம். ஆர் பாளையத்தில் உள்ள நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் ஆலத்தூர் ஒன்றியத்தில் உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் தங்கி உள்ளனர். இதன் ஒரு பகுதியாக எசனையில் உள்ள இயற்கை விவசாயி பெருமாளிடம் மாணவிகள் திராட்சை, முட்டை கோஸ், காலிபிளவர் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகள் விளைவிப்பு பற்றியும் பயிற்சி பெற்றனர்.

அவர் விளைவிக்கும் காய்கறிகளின் விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பின்சார் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் அங்கக முறையில் விளைவிப்பது குறித்து தெளிவாக விளக்கினார்அவருடைய தோட்டத்தின் பராமரிப்பு முறைகள் மற்றும் பாசன இயந்திரங்களை பார்வையிட்டு அவற்றை இயக்குவது குறித்தும் பயிற்சி பெற்றனர்.

Tags:    

Similar News