இயற்கை வழி வேளாண்மைக் குழுவினருடன் வேளாண் மாணவர்கள் கலந்துரையாடல்

திருச்சி வேளாண் கல்லூரி மாணவிகள் அத்திவெட்டியில் வேளாண்மை பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.

Update: 2024-05-04 16:32 GMT

வேளாண் மாணவர்கள

திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மாணவிகள், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள அத்திவெட்டி தென்னை இயற்கை வழி வேளாண்மைக் குழு விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், அத்திவெட்டி கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் ஊரக வேளாண் பணி வாயிலாக இயற்கைவழி வேளாண்மை குறித்து தென்னை இயற்கைவழி வேளாண்மை குழுவின் தலைவர் மற்றும் நம்மாழ்வாரின் 'வானகம்'  அமைப்பின்மூலம் நேரடி பயிற்சி பெற்றவர்களுமான வைரவமூர்த்தி,

செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் வடிவேல்மூர்த்தி மற்றும் நல்லசிவம், மணிமுத்து ஆகியோரிடம் கலந்துரையாடினர். பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல், உப்புக் கரைசல், மீன் அமிலம், பூச்சிவிரட்டி  மற்றும் எருக்குக் கரைசல் ஆகியவற்றின் செய்முறை, பயன்படுத்தும் முறை மற்றும் பயன்கள் குறித்துக் கேட்டறிந்தனர்.

Tags:    

Similar News