அதிமுக 52ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

ஓமலூர் அருகே செம்மாண்டப்பட்டியில் அதிமுகவின் 52ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2023-10-31 01:21 GMT

அதிமுக பொதுக்கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியில் சேலம் புறநகர் மாவட்டம், காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய சார்பில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் அதிமுகவின் 52 ஆம் ஆண்டு தொடக்க விழா  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக விவசாய அணி தலைவரும், முன்னாள் புரட்சித்தலைவி பேரவை செயலாளருமான அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பல்பாக்கி கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சேலம் புறநகர் மாவட்ட  அம்மா பேரவை செயலாளரும், ஓமலூர் சட்டமன்ற உறுப்பினருமான மணி வரவேற்புரை ஆற்றிய இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதில் இந்தியாவிலேயே கொரோனா காலகட்டத்தில்  இரண்டு ஆண்டு காலம் ஆசிரியர்களுக்கு சம்பளம்  கொடுத்த ஒரே முதல்வர் எடப்பாடியார் தான் என பெருமிதத்துடன் பேசினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் எஸ்எஸ்கேஆர் ராஜேந்திரன், மாரியம்மாள்ரவி,ஒன்றிய, பேரூர், கிளை கழக செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News