அதிமுக. முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல்:நலம் விசாரித்த எம்எல்ஏ

அரக்கோணம் அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-04-25 09:34 GMT

நலம் விசாரித்த எம்எல்ஏ

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் அரிகிலாப்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்று கொண்டிருந்தார்.

கல்லாறு அருகே சென்றபோது அவரை காரில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் வழிமறித்து கற்கள் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்தவர்கள் ரமேஷ் தாக்கப்படுவதை கண்டு ஓடி வந்தனர். உடனே 3 பேரும் காரில் ஏறி தப்பி சென்றனர்.

Advertisement

இதில் படுகாயமடைந்த ரமேஷ் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இந்த தகவல் அறிந்ததும் அரக்கோணம் சு.ரவி எம்.எல்.ஏ, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பி.ஆர்.மனோகர் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் நேரில் சென்று ரமேஷிடம் விசாரித்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணம் கொடுக்கல் வாங்கல் தகராறா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News