சேலம் : அதிமுக பூத்கமிட்டி முகவர்கள் கூட்டம்

சேலம் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட17வது வார்டு அதிமுக பூத்கமிட்டி முகவர்கள் கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2023-12-31 02:08 GMT

அதிமுக பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம்

சேலம் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட17 - வது டிவிசனில் உள்ள பேர்லாண்ட்ஸ், சொர்ணபுரி, ஆலமரத்துகாடு, ஏரிக்காடு, அய்யர்லைன் ஆகிய பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனைக்கூட்டம் சொர்ணபுரியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு வார்டு செயலாளர் புல்லட் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. ரவிச்சந்திரன், பகுதி செயலாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, பேரவை இணைச் செயலாளர் செங்கோட்டையன் , வட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

இதில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசியதாவது,  முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. பூத் கமிட்டி முகவர்கள் தேர்தல் நேரத்தில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். எடப்பாடி பழனிசாமி அமைச்சராக இருந்த போது சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளான சாக்கடை, குடிநீர், மேம்பாலம், பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா, சட்டக்கல்லூரி என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சியில் மின் கட்டண, உயர்வு சொத்துவரி, விலைவாசி உயர்வு ஆகியவை தி.மு.க.வின் சாதனையாக உள்ளது. வருகிற எந்த தேர்தலா இருந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்றார்.

Tags:    

Similar News