அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
Update: 2023-12-17 07:46 GMT
அதிமுக கூட்டம்
எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் கரூர் மாவட்டம் தாந்தோணி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நேற்று இரவு, பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தாந்தோணி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தேர்தல் வியூகங்கள் குறித்து எம் ஆர் விஜய பாஸ்கர் விளக்கி கூறினார். அவரது ஆலோசனைகளை ஏற்று அதன்படி செயல்படுவதாகவும் கட்சி நிர்வாகிகள் உறுதியளித்தனர்.