திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளர் வாக்குசேகரிப்பு
திருவண்ணாமலையில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட செங்கம் மேற்கு ஒன்றியம், ஜமுனாமரத்தூர், தெற்கு ஒன்றியம் செங்கம் நகரத்துக்கு உள்பட்ட அன்வராபாத், குயிலம், புதுப்பட்டு, பரமனந்தல், கொட்டாவூர், குப்பனத்தம், கல்லாத்தூர், ஊர்கவுண்டனூர், தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், மேல்செங்கம், அந்தனூர், மேல்பள்ளிப்பட்டு, மேல்ராவந்தவாடி, மேல்வணக்கம்பாடி, கட்டமடுவு, நீப்பத்துறை, இளங்குண்ணி, ஆண்டிப்பட்டி, மேல்வணக்கம்பாடி, பக்கிரிபாளையம், மேல்புழுதியூர், ஆனைமங்கலம், செங்கம் துக்காப்பேட்டை, தோக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம். கலியபெருமாளை ஆதரித்து போளூர் எம்எல்ஏ அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி வாக்கு சேகரித்து பேசியதாவது,
செங்கம் - போளூர் சாலை நீதிமன்ற வளாகத்தில் இருந்து மண்மலை வரை அமையவுள்ள புறவழிச் சாலைப் பணிகள் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், செங்கம் நகரில் அடிக்கடி நெரிசல் ஏற்படுகிறது. திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் வெற்றி பெற்றவுடன், அந்த புறவழிச் சாலைத் திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். மேல்செங்கம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டுள்ள 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட மத்திய மாநில விதைப் பண்ணையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.