அதிமுக நிர்வாகி மறைவு - எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

ஓமலூர் அருகே அதிமுக நிர்வாகி மறைவையடுத்து அவரது குடும்பத்தினரை சந்தித்த அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார்.

Update: 2023-12-29 08:17 GMT

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஈசான்காட்டூரில் வசிக்கும் அதிமுக ஓமலூர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளராக சண்முகம் என்கிற ராஜா என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் கடந்த டிசம்பர் 23ஆம் தேதி தனது நண்பர்களுடன் மருதமலை கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும் போது சங்ககிரி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவின் பேரில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல் மற்றும் சிவபெருமான் உள்ளிட்ட பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, ராஜாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் அதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், சட்டமன்ற உறுப்பினர் மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், அசோகன், மணிமுத்து, கருப்பூர் பேரூர் செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் தர்மன், அதிமுக கருப்பூர் பேரூராட்சி 1வது வார்டு உறுப்பினர் சுரேஷ்குமார், காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய பொருளாளர் மகாராஜன், ஓமலூர் பேரூர் கழக அம்மா பேரவை செயலாளர் தளபதி உள்ளிட்ட அதிமுக ஒன்றிய நகர பேரூர் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News