கரூரில் அதிமுக பொதுக்கூட்டம்

கரூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-10-30 07:35 GMT

அதிமுக பொதுக்கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக கட்சி தொடங்கிய 52 ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் கரூர் அடுத்த காந்திகிராமம் பகுதியில் கட்சியின் அவை தலைவர் திரு.வி.க. தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் இலக்கிய அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வைகை செல்வன், மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், இந்திய துணைக் கண்டத்தில் எந்த மாநிலத்திலும் வழங்காத அளவுக்கு 58 லட்சம் பேருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது அதிமுக அரசு. இன்று அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டு, விடியல் ஆட்சி என்று கூறி கொள்ளையடிக்கும் திமுக அரசை அகற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News