தோசை சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வட சென்னை வேட்பாளர்

மோடி மட்டுமல்ல திமுக ஆட்சிக்கு வந்தாலும் கூட வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு தான் என்றும், இருவருக்கும் பெரிய வேறுபாடு இல்லை அதிமுக வட சென்னை வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-15 09:23 GMT

தோசை சுடும் வேட்பாளர்

வட சென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ இன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி பகுதியில் 46வது வட்டம் மூர்த்திங்கர் தெரு ஏரிக்கரை ராமர் கோயில் தொடங்கி, இரத்தினம் 1வது தெரு 2வது தெரு, மூர்த்திங்கர் தெரு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, சாமந்தி பூ காலனி, நேரு நகர், மல்லிகை பூ காலனி, மகஜன்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

முன்னதாக, சாஸ்திரி நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் கடவுளை வணங்கி விட்டு வெளியே வந்த கிறிஸ்தவ மக்களிடம் அதிமுக வடசென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, மூர்த்திங்கர் தெரு ஏரிக்கரை ராமர் கோவிலில் தரிசனம் செய்த பின் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று அந்த மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், உடன் மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் மற்றும் கூட்டணி கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருந்தனர். செல்லும் வழி எல்லாம் பட்டாசுகள் வெடித்தும்,

மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் தேங்காய் சுற்றி திருஷ்டி கழித்தும் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அருகில் இருந்த சிறிய உணவு கடை ஒன்றில் தோசை சுட்டுக்கொடுத்து வாக்கு சேகரித்தார் ராயபுரம் மனோ. பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், அண்ணாமலை பகல் கனவு அதிகம் காண்கிறார் அது எதுவும் நிச்சயம் நிறைவேறாது, அதிமுக 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பான ஆட்சியை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. தாய்மார்கள் தங்களின் ரத்தத்தை கூட அதிமுக இயக்கத்திற்கு சமர்ப்பிக்க தயாராக இருக்கிறார்கள். 

அண்ணாமலை எண்ணம் என்ன என்றால் தூங்கி எழுந்தால் தலைப்பு செய்தியில் வரவேண்டும் அதற்குத்தான் பேசுகிறார். நாக்கு இருப்பவர்கள் எது வேண்டுமானாலும் பேச வேண்டும் அது சாத்தியமா என்று பார்க்க வேண்டும். இன்று சொல்வதை நாளை மக்களுக்கு செய்ய வேண்டும் எப்படியாவது மக்களை தன் பக்கம் திருப்ப வேண்டும் என்றுதான் செய்கிறார் மக்களின் பார்வை திரும்ப வேண்டும் என்றுதான் செய்கிறார் நான் என்று செயல்படுகிறார்.

கட்சியை வளர்க்க செயலாற்றவில்லை, முதலில் வார்டு கவுன்சிலர் ஆக தனியாக நின்று வெற்றி பெற்று காட்டட்டும் பின்பு பேசட்டும்.  மிரட்டல் அச்சுறுத்தல் எல்லாவற்றையும் கடந்து தான் அதிமுக செயலாற்றி வருகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார். எந்த மிரட்டல் மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்.  டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்த வரை இவர்களுக்காக மற்றவர்கள் காத்திருந்தார்கள் இப்போது பாஜகவிற்கு சென்று இரண்டு சீட்டுக்காக காத்திருக்கிறார்கள்.

இதைவிட கொடுமை அண்ணாமலை அவருக்காக பிரச்சாரம் செய்கிறார் என்றார். அப்போது டிடிவி எப்படிப்பட்டவர் என்று தெரியும் அவரை போய் ராமனுடன் இணைத்து பேசலாமா இது மிகப் பெரிய அசிங்கம் அது அண்ணாமலைக்கே தெரிய வேண்டும் என்று மாவட்ட செயலாளர் ராஜேஷ் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அதிமுக வேட்பாளர் மனோ மோடி மட்டுமல்ல திமுக ஆட்சிக்கு வந்தாலும் கூட வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு தான் இருவருக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றார்.

Tags:    

Similar News