செய்யாறு நகர அதிமுக செயலாளர் விருப்ப மனு வழங்கல்
ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்யாறு நகர அதிமுக செயலாளர் கே.வெங்கடேசன் விருப்ப மனு வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-29 17:43 GMT
விருப்ப மனு வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அஇஅதிமுக தலைமை அலுவலகத்தில் செய்யாறு நகர அதிமுக செயலாளர் கே.வெங்கடேசன் விருப்ப மனு கட்டணமாக ரூ.20,000 செலுத்தி விண்ணப்பத்தினை தலைமை கழக நிர்வாகிகளிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் துணைத் தலைவர் டி.பி.துரை, நகர அவைத் தலைவர் ஜனார்த்தனன், ஒன்றிய செயலாளர்கள் எம்.அரங்கநாதன், சி.துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்