சேலம் : அதிமுக தொண்டர் மீட்பு கூட்டம்
பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்
சேலத்தில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார். அவர் பேசுகையில் அதிமுகவில் தொண்டர்களின் உரிமையை யாராலும் எப்பொழுதும் பறிக்க முடியாது என்ற சட்டவிதியை உருவாக்கினார் எம்ஜிஆர். தொண்டர்கள் தான் தலைமைப் பதவியான பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி, பண பலத்தால் நம்பிக்கை துரோகத்தால் சட்டவிதியை காலில் போட்டு மிதிக்கும் செயலை செய்து கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி. மீண்டும் ஜெயலலிதாதான் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற உரிமையை மீட்க வேண்டும் தாயுள்ளத்தோடு வழிநடத்தப்பட்ட கட்சியை சின்னாபின்னமாக்கி விட்டார் நடிகை நிர்மலாவுக்கு நான் சீப் ஏஜெண்டாக இருந்தேன் என்பதை எடப்பாடி பழனிசாமி நிருபித்துவிட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன் , இல்லாவிட்டால் ஈபிஎஸ் விலக வேண்டும் எடப்பாடி பழனிசாமி அரசியலைவிட்டு விலகினால் தான் தொண்டர்களுக்கு மகிழ்ச்சி. இரண்டு முறை முதலமைச்சர் பதவியை எனக்குதான் தந்தார் ஜெயலலிதா ஒரு கடுகு மணி அளவில் தவறு செய்யாத காரணத்தால் தான் மீண்டும் அந்தப்பதவியை எனக்கே வழங்கினார். நான்கரை ஆண்டுகாலம் பாஜகவின் ஆதரவில் தான் தமிழகத்தில் ஆட்சி நடந்தது. ஈபிஎஸ் தலைமையை ஏற்றுக்கொள்ளாத தொண்டர்கள், பொதுமக்களால் அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்வியை தழுவியது என்றார்.