விழுப்புரத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விழுப்புரத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
Update: 2023-12-02 12:05 GMT
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக் கப்பட்டது, இதையொட்டி எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில், கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன் முன்னிலையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது, அதனை தொடர்ந்து பொதுமக்களிடையே எய்ட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நோய் பாதித்தவர்கள் எவ்வித தாழ்வு மனப்பான்மையும் இல்லாமல் சமூகத்தில் தானும் ஒரு அங்கம் என்பதை உணர்ந்திடும் பொருட்டு அரசால் வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள், இதர உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தும் விதமாக எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் கலெக்டர் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன் ஆகியோர் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தனர். பின்னர் வாகனங்களில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டியும், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்து பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்ட வினாடி-வினா, நாடக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களும், 5 திருநங்கைகளுக்கு அடையாள அட்டையும், 5 திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரமாதேவி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக் டர் செந்தில்குமார், மாவட்ட திட்ட மேலாளர் கவிதா, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பார்வையாளர் பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.