தைப்பொங்கலை முன்னிட்டு ஐயனாரப்பன் கோவில் குலதெய்வ வழிபாடு
தைப்பொங்கலை முன்னிட்டு ஐயனாரப்பன் கோவில் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-01-16 14:23 GMT
தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு ஐயனாரப்பன் கோவில் குலதெய்வ கோயில்களில் வழிபாடு ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும்.
அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளரி வெள்ளி கிராமம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயனாரப்பன் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்று கூடி புது பானையில் பொங்கலிட்டு சுண்டல், அவுல், சக்கரை பொங்கல், பஞ்சாமிர்தம், சுவாமிக்கு படையில் இட்டு வழிபட்டனர்.