AIYF சார்பில் கடலை மயிலை ஒன்றிய பேரவை கூட்டம் நடைபெற்றது
படித்து முடித்த இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கல்வி உதவித்தொகை அரசு உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவில் கடமலை மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட வருசநாட்டில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் கடமலை மயிலை ஒன்றிய பேரவை கூட்டம் ஆ.காரல்மார்க்ஸ் தலைமையில் ஆதிபராசக்தி கோவில் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் உறுப்பினர்கள் அஞ்சலி தீர்மானத்தை ஜெகநாதன் அவர்கள் வாசித்தார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் மணவாளன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு உறுப்பினர் ஆ.கௌரி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இந்த கூட்டத்தில்தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஒன்றிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி AIYF மாவட்ட செயலாளர் இரா.தமிழ் பெருமாள் சிறப்புரையாற்றினார். 9 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒன்றிய தலைவராக M.மகேந்திரன், ஒன்றியச் செயலாளராக ஆ.காரல்மார்க்ஸ் ,ஒன்றிய பொருளாளராக M.ஜெகநாதன் ஆகியோரும் ,, ஒன்றிய துணைச் செயலாளராக வாஞ்சிநாதன் ஒன்றிய துணைத் தலைவராக சின்னச்சாமி என்பவரும், C.முத்துப்பாண்டி, P.வசந்த், P.பாண்டீஸ்வரன், V.சங்கரேஸ்வரன் ஆகியோர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாகவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இந்த கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. படித்து முடித்து வேலையின்றி தவிக்கும் இளைஞர்களுக்கு சுய தொழில் தொடங்கி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் எவ்வித நிபந்தனையின்றி சுயதொழில் கடன் உதவி தங்குதடையின்றி வழங்கிட வழிவகை செய்ய வேண்டும். வருசநாடு மலை கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் உயிரைப் பாதுகாத்திட வருஷநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் இயங்கி மருத்துவ சேவை வழங்கிடவும், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் ஒரு பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளான சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ,கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு மலை கிராமங்கள் தகவல் தொடர்பின்றி தனித்தீவாக தவிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனைத் தவிர்க்க அரசு மற்றும் தனியார் தகவல்தொடர்பு நிறுவனங்கள் மலைக்கிராம மக்களுக்கு தகவல் தொடர்பு சேவையும், இணையத்தள சேவையும் இடைவிடாது கிடைக்க தேவையான இடங்களில் உயர் தகவல் தொடர்பு கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருசநாடு சுற்றுப்பகுதியில் உள்ள சாலை வசதிகள் இல்லாத மலை கிராமங்களுக்கு போர்க்கால அடிப்படையில் சாலை வசதி அமைத்திட நடவடிக்கை எடுத்து, குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய கிராமங்களில் உள்ள குடிநீர் வழங்கும் மேல்நிலை தண்ணீர் தொட்டிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி மணிக்கணக்கில் ஏற்படும் செயற்கை மின்தடையை தமிழ்நாடு மின்சார வாரியம் தடுத்து நிறுத்தி தடையில்லா மின்சாரம் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கண்ட தீர்மானங்கள் கடமலை மயிலை ஒன்றிய பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.