அழகப்பரின் 115வது பிறந்தநாள் விழா:மலர் வளையம் வைத்து மரியாதை
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிறுவனர் வள்ளல் அழகப்பரின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிறுவனர் வள்ளல் அழகப்பரின் 115வது பிறந்தநாளை முன்னிட்டு அழகப்பர் நினைவிடத்தில் துணைவேந்தர் ஜி.ரவி தலைமையில் பல்கலைக்கழக அதிகாரிகள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள்,
மாணவர்கள் சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த சிறப்பு சொற்பொழவு நிகழ்ச்சிக்கு பதிவாளர் முனைவர் செந்தில்ராஜன் வரவேற்றார். துணைவேந்தர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், வள்ளல் என்றால் உண்மையிலேயே,
அது வள்ளல் அழகப்பர் தான். அதற்கு நன்றி கடனாக நாம் செய்ய வேண்டியது எல்லாம் அழகப்பா பல்கலைக்கழத்தை தொடர்ந்து ஒரு சிறந்த பல்கலைக்கழகமாக தக்கவைப்பதே, என்றார். முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பையா, பேராசிரியர் ஞானசம்பந்தன் ஆகியோர் பேசினர். வள்ளல் அழகப்பரின் பேரன் வயிரவன் ராமநாதன் காணொலி காட்சி மூலம் சிறப்புரையாற்றினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், குணசேகரன், பேராசிரியர்கள் பழனிச்சாமி, ராசாராம், சேகர், திருமலைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தேர்வாணையர் ஜோதிபாசு நன்றி கூறினார்.