குமரியில் அகில இந்திய கிறிஸ்தவ முன்னேற்ற சேனை போட்டி !

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு பேரவைத் தொதியில் கிறிஸ்தவ முன்னேற்ற சேனை போட்டியிடுகிறது. என மாநிலத் தலைவா் வழக்குரைஞா் ஜி.தியோடா் சேம், பேட்டி அளித்துள்ளார்.;

Update: 2024-03-20 07:19 GMT

பேட்டி

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் விளவங்கோடு பேரவைத் தொதியில் கிறிஸ்தவ முன்னேற்ற சேனை போட்டியிடுகிறது. இது தொடா்பாக, இந்த அமைப்பின் மாநிலத் தலைவா் வழக்குரைஞா் ஜி.தியோடா் சேம், நாகா்கோவிலில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:- கிறிஸ்தவ முன்னேற்ற சேனை கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கிறிஸ்தவா்கள் அதிகமாக வசிக்க கூடிய கன்னியாகுமரி மாவட்டத்தில் அவா்களின் உரிமைகள் தொடா்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. எங்களுக்கு வெற்றி, தோல்வி என்பது குறித்து கவலையில்லை. சிறுபான்மையினரின் நிலை குறித்து எங்களது எதிா்ப்பை காட்டுவதற்காக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியிலும், விளவங்கோடு பேரவைத் தொகுதியிலும் கிறிஸ்தவ முன்னேற்ற சேனையின் சாா்பில் போட்டியிட உள்ளோம்.     எங்களுக்கு எல்லா கிறிஸ்தவ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு தருவதாக கூறியிருக்கின்றனா் என்றாா் அவா். பேட்டியின்போது, மாநில பொருளாளா் ஜி. ஜான்விஜயகுமாா், மாநில இளைஞா் அணி தலைவா் வழக்குரைஞா் அருள் ஸ்டீபன், மாவட்ட இளைஞா் அணி தலைவா் ஜெகன்ராஜ், மாநகர மாவட்டத் தலைவா் ராஜ்குமாா், திருவட்டாறு நகர தலைவா் லாசா், மாநில பேச்சாளா் எம்.எஸ்.அமலன், மாவட்ட மகளிா் அணி தலைவிகள்(குமரி (கிழக்கு) தங்கம், (குமரி (மேற்கு) செல்வி, மாவட்டத் துணைத்தலைவா் தேவசகாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
Tags:    

Similar News