மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு!
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இணைய வழி முறையில் ஒதுக்கீடு முறை நடைபெற்றது.;
Update: 2024-03-22 17:40 GMT
வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் அரசு அதிகாரிகள் தேர்தல் நடத்துவதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவு கணினி அறையில் மக்களவை பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட இணையவழி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.