வெள்ள தடுப்பு பணிகளுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு - அமைச்சர்

Update: 2023-12-08 01:42 GMT

அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மழை மற்றும் புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்றத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்ய கடந்த இரண்டரை ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் இடங்கள் எவை என்பதை அறிந்து அந்த இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர் அமைச்சர் முத்துச்சாமி இது குறித்து மேலும் கூறியதாவது:-மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் 72 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மழை,வெள்ளப் பாதிப்புகளை தடுக்க 21 மண்டலக் குழுக்கள்,2 தேசிய பேரிடர் மீட்பு படை குழுவில் மொத்தம் 56 பேர்,மாநில பேரிடர் மீட்புப் படையினர் 35 பேர் தயார் நிலையில் உள்ளனர்.எந்த நேரத்திலும் மக்களைக் காக்க தயாராக இவர்கள் உள்ளனர்.15 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 80 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியிருக்கின்றன.வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக 62 நிவாரண முகாம்கள்,24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை, புதிதாக 3100 மின்கம்பங்கள்,1306 மின்மாற்றிகள்,12 படகுகள் ஆகியனவும் தயார் நிலையில் உள்ளன.என்றார் 

Tags:    

Similar News