அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
அரியலூர் அருகே திமுக, பாஜக கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுக மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.;
Update: 2024-01-02 04:46 GMT
அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
அரியலூர் மாவட்டம் தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள முன்னாள் அரசு கொறடா இல்லத்தில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் முன்னாள் அரசு கொறடா தாமரை. இராஜேந்திரனை சந்தித்து பொய்யாதநல்லூர் மற்றும் குணமங்கலம் கிராமத்தை சேர்ந்த திமுக, பாஜக நிர்வாகிகள் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அரசு கொறடா சால்வை அணிவித்து தனது வாழ்த்தினை தெரிவித்து கொண்டார். இதில் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.