அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
பெரியப்பட்டியில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்;
Update: 2024-05-22 01:17 GMT
அதிமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் ,பெரியப்பட்டியில் மாற்றுக்கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர், அ.தி.மு.க., மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க.,வில் இணைந்தனர். இதில், அரூர் எம்.எல்.ஏ., வே.சம்பத்குமார், தர்மபுரி நகர செயலர் பூக்கடைரவி, அரூர் தெற்கு ஒன்றிய செயலர் ஆர்.ஆர்.பசுபதி, அரூர் நகர செயலர் ஏ.ஆர்.எஸ்.எஸ்.பாபு (எ) அறிவழகன், மாவட்ட துணை செயலர் செண்பக சந்தோஷ், மாவட்ட கூட்டுறவு இயக்குனர் பொன்னுவேல், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாஷா, சிவன், ஒன்றிய பொருளாளர் சாமிகண்ணு, இளையராஜா, முருகன், ராஜா, சரவணன், கருணாநிதி, விஜய், நடராஜன், சதாசிவம், சுப்பிரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.