திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

முசிறி அருகே தொட்டியத்தில் பல்வேறு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500 பேர் அமைச்சர் கே. என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

Update: 2024-04-12 14:01 GMT

முசிறி அருகே தொட்டியத்தில் பல்வேறு மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 500 பேர் அமைச்சர் கே. என்.நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது. இதில் தொட்டியம் பகுதியில் உள்ள பல்வேறு மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500-க்கும் மேற்ப்பட்டவர்கள் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள்.

இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் , மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி , மாநகர செயலாளர் அன்பழகன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News